உத்தரபிரதேச மாநிலம் பதோகி பகுதியில் நேற்று இரவு தசரா பண்டிகையையொட்டி நடந்த துர்கா பூஜை பந்தலில் ஆரத்தியின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்துகுறித்து தகவலறிந்து சம்ப இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பூஜை நடந்த இடத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் தீ விபத்தில் 51 பேர் காயமடைந்தனர். 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.