தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதனை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் ரூ.34 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சந்தேகத்தின்பேரில் 3.5 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.