நிகழ் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புதிய பொறியியல் பாடத்திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிறது. இப்பாடத்திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் எனத் தெரிகிறது.