கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்தபள்ளியில், படித்துவரும் மூன்றே வயதான ஹாசனி, பவின் விசாகன் ஆகிய இருவரும் இணைந்து தமிழ் வருடங்களை 1 நிமிடம் 4 விநாடிகளில் கூறி உலக சாதனை படித்துள்ளனர். இதன்மூலம் ஏற்கனவே, தமிழ் வருடங்களை 1 நிமிடம் 45 விநாடிகளில் சொல்லி இருக்கும் ஜெட்லி புக் ஆப் வேர்ல்டு சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். மாணவர்கள் படிக்கும் மழலையர் பள்ளியின் தளாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில், சாதனையை பதிவு செய்ய வந்த உலக சாதனை குழுவினர், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறுவர்களை வெகுவாக பாராட்டினர். இளம்பயிர் முளையிளே தெரியும் என்பார்கள். அந்த சொல்லுக்கு ஏற்றார் போலவே இந்த மாணவர்கள்களும் இளம் பருவத்திலேயே சாதனைப்படைத்துள்ளனர். எனவே வருங்காலத்தில் மிகப்பெரிய உச்சங்களை தெடுவார்கள் என்பதில்லை அச்சமில்லை.