உக்ரைன் மீது ரஷியா 40 நாட்களுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷியா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்தநிலையில், இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில், இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சென்செக்ஸ் 393.01 புள்ளிகளும் நிப்டி 91.40 புள்ளிகளும் சரிந்தது. இதனால் சென்செக்ஸ் 0.66 சதவீதம் சரிந்து 59,217.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, நிப்டி 0.51 சதவீதம் சரிந்து 17,716.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மேலும், ஹச்டிஎப்சி நிறுவன பங்குகள், தொடர்ந்து 3 நாட்களாக வீழ்ச்சிப்பாதையில் வர்த்தகமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.