குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா முழுவதையும் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வீரர், வீராங்கனைகள் 36 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஏற்கனவே உள்ள நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து உள்பட விளையாட்டு போட்டிகளுடன் இந்தாண்டு கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாள்வீச்சு போட்டிகள் மகளிருக்கான பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி, பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எ 15-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்று தங்கம் வென்றார். அதேபோல், ஆடவர் மும்முனை தாண்டுதலில் இறுதிச்சுற்றில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.