day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

2 மாணவிகள் தீண்டாமை கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி : பள்ளியில் விசாரணை

2 மாணவிகள் தீண்டாமை கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி : பள்ளியில் விசாரணை

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த பஸ்சில் பள்ளிக்கு செல்வார்கள். அதேபகுதியை சேர்ந்த ஒருசில மாணவிகள் அவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டி இருக்கையில் அமரவிடாமல் நின்றபடியே வருமாறு மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமூகத்தை சொல்லியும் திட்டி வந்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோதும் அந்த மாணவிகளுக்கும், மற்றொரு தரப்பு மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த 2 மாணவிகளும் நடந்த விபரங்களை தங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிகளையே வகுப்பு ஆசிரியர் கண்டித்து அமர வைத்துள்ளார்.

இதனால் மாலையில் பள்ளி முடிந்ததும்,பஸ்சில் சென்றால் அதேமாணவிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவார்கள் என்று பயந்து, 2 மாணவிகளும் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

இதனையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்கு இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தலைமையில் வத்தலக்குண்டு வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன் அறிக்கையை பள்ளிகல்வித்துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அளிக்க உள்ளதாகவும், அதன்பிறகு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!