இந்தோனேசியா நாட்டில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான சுங்க வரியை பெருமளவில் குறைத்தது. இந்த குறைந்த விலை காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் அந்த நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி அதிகரித்தது. அதன்படி, கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான 11 மாதங்களில் நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 17.12 லட்சம் டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.7 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 6.28 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரித்ததால், கச்சா பாமாயில் இறக்குமதி பெருமளவில் குறைந்தது என இந்திய தொழிலகக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.