பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை தினந்தோறும் வதைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ச்சியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில், அன்றிலிருந்து இன்றுவரை 13 முறை விலை உயர்ந்துவிட்டது.