இந்ியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, 2ஆவது டி20 போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியிலும், 3ஆவது டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் முனைப்புடன் உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.