இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,946 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,34,376ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 10 பேர் இறந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,923ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,417 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,79,485 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,9682ஆக குறைந்துள்ளது. பண்டிகை தினத்தையொட்டி நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளுடன், முககவசம் அணிவது கட்டாயம் உதவிகரமாக இருக்கும்.