கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகள் திரண்டுவந்து வழிபாடு நடத்தி கொண்டாடுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5ம் தேதி தொடங்கிய விழாவில், வருகிற 19ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக, 18ம் தேதி மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடைபெற உள்ளது.