மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த் திருவிழா வருகிற 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.