பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நித்தீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே அந்த மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பாகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் பங்கா மற்றும் ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேரும், முங்கேர், கடிஹர், மதேபுரா மற்றும் சஹர்சா ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் என கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவரணமாக வழங்கப்படும் என்று பீகார் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.