தீபாவளி பண்டிகை நாளில், காலை 6 மணி முதல் – 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் – 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக, சென்னையில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.