நம்ப தகுந்த சமூக ஊடங்களில் ஒன்றாக டிவிட்டர் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அதிகார கணக்கு என்பதை உறுதி செய்யும் வகையில் ட்விட்டர் பக்கம் அவர்களுக்கு ப்ளூ டிக் கொடுக்கிறது. இந்த ப்ளூ டிக் ட்விட்டர் கணக்கு வைத்திருப்போரிடம் ஏற்கனவே மாதம் ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி மாதந்தோறும் 20 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,600 வசூலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.