இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஜூன் மாதம் 23-ம் தேதி இதே நாளில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்றதன் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து இன்றுடன் ரோகித் சர்மா இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத்தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரரான இவர். ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதம் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”என் உடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், வீரர்கள், நிர்வாகம், ஊடகம் ஆகிய அனைவரும் சேர்ந்துதான் இந்த இடத்தை எனக்குப் பெற்றுத் தந்திருக்கின்றனர்” என, இந்தியக் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
𝟭𝟱 𝘆𝗲𝗮𝗿𝘀 in my favourite jersey 👕 pic.twitter.com/ctT3ZJzbPc
— Rohit Sharma (@ImRo45) June 23, 2022