பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, மதுபானங்களைக் கொண்டுசெல்வதற்காக ஆகும் செலவு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, பீர் விலையை மட்டும் உயர்த்த அதன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதேபோல் அது தயாரிக்கப் பயன்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் பீர் விலையை உயர்த்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பீர் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்த கலால் துறை சம்மதித்தால், ஒரு பாட்டீல் பீர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்த பீர் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கு கலால் துறை அனுமதி வழங்கும்பட்சத்தில், வருகிற 15ம் தேதியில் இருந்தே கர்நாடகாவில் பீர் பாட்டில்களின் விலை உயரும் எனத் தெரிகிறது.