கருக்கலைப்பு செய்தேன்.. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகை சமந்தா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாகசைதன்யா விற்கும் திருமணம் நடைபெற்றது. இந்து – கிறிஸ்தவ முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இருவரும் குடும்ப வாழ்கை தொடங்கிய நிலையிலும் தொடர்ந்து சமந்தா படங்களில் நடித்து வந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி பேமலி மேன்’ என்ற வெப் தொடர் வெளியானது. அந்த தொடரில் அதிக கவர்ச்சியுடன் நடித்ததால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் டிவிட்டரில் தனது பெயிரில் ‘எஸ்’ என சமந்தா மாற்றியது இருவரும் விவகாரத்து செய்யப்போகிறார்கள்
இந்த நிலையில் அவர்களுடைய பிரச்னை குறித்து இருவரும் வாய் திறக்காத நிலையில் வெறும் வதந்தியாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர். இவர்களுடைய இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்
அதில், ”எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்துள்ளேன் போன்ற பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
|
|