வங்கதேச நாட்டின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்தின் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே வயது மதிக்கத்தக்க 7 மாணவர்கள், 4 ஆசியர்கள் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். மினிபேருந்து மீது ரயில் மோதி, பல நூறு மீட்டர் தண்டவாளத்தில் தேய்த்தபடி இழுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், பயிற்சியை முடித்து மைதானத்தில் இருந்து மினி பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதாக உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.