சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11வது முறையாகத் தேசிய சீனியர் போட்டியில் பட்டம் வென்ற தமிழ்நாடு அணியில் அரவிந்த் 25 புள்ளியும், அரவிந்த் குமார் 21 புள்ளியும் பெற்றனர்.