11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 12ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த 5ஆம் தேதியும் அதனைத்தொடர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த 6ஆம் தேதியும் தொடங்கிய நிலையில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வுகளை 8,83,884 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 4,33,684 மாணவர்களும், 4.50.198 மாணவிகளும் இந்த தேர்வை எழுதினர். இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு தேர்வு இந்த மாத இறுதியில் 31ஆம் தேதி நிறைவுப்பெற இருக்கிறது.