10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி) மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்வதுடன், மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டலுக்கு வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம்.