”அனுமன் ஜி சார் தம்” என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை நிறுவப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் மோர்பி நகரில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த திட்டத்தின் முதல் சிலை ஷிம்லாவில் நிறுவப்பட்டு இருக்குறது. இரண்டாவது சிலை தற்போது குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டு உள்ளது. அதேபோல, அடுத்த இரண்டு சிலைகளும் முறையே ராமேஷ்வரம் மற்றும் மேற்குவங்கத்தில் நிறுவப்பட உள்ளதாக பிரதமர் கூறினார். முன்னதாக அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டர் பகக்த்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.