உத்திரபிரதேச மாவட்டத்தின் ‘ஒரே தயாரிப்பு ஒரே மாவட்டம்’ (‘one product one district’ ) என் ற திட்டத்தின் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய முதன்மைச் செயலாளர் நவநீத் சிங்கால் ” உத்திர பிரதேச மாவட்டத்தின் ‘ஒரே தயாரிப்பு ஒரே மாவட்டம்’ (‘one product one district’ ) திட்டத்தின் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக முதலமைச்சரை அவரது இல்லத்தில் கங்னா ரனாவத் சந்தித்து நன்றியை தெரிவித்துள்ளார், பிரபல நடிகை என்பதால் மக்களுக்கு பரிச்சயமானவர் அதன் காரணமதாக இந்த திட்டம் மக்களை விரைவாக சென்று சேரும் என்ற காரணத்தால் அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் நோக்கம் பாரம்பரிய தொழிசாலைகளை 75 மாவட்டங்களிலும் உருவாக்குவது போன்ற அம்சங்களை உடையது ” என்றார்.
இச்சந்திப்பின்போது, ராமர் கோவிலின் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை கங்கனாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்தார்.இதுகுறித்து கங்கனா ரனாவத் கூறுகையில், “‘தேஜஸ்’ படப்பிடிப்பின் ஒத்துழைப்புக்காக உத்தரபிரதேச அரசுக்கு நான் நன்றி தெரிவித்தேன். வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற நல்வாழ்த்துகள்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.