தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், உணவுதானியக் கிடங்கு, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம், பல்நோக்கு மையக் கட்டடம், கலையரங்கக் கட்டடம், 45 பசுமை வீடுகள், சமுதாய சுகாதார வளாகம், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பயணிகள் நிழற்குடை, மண்பரிசோதனைக்கூடம், ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பகுதி, துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு, வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறைகள், பூங்கா , சுகாதார நல மையம், கசடு கழிவு மேலாண்மை மையம், நகர்புற நல மையம், அண்ணாமலை பொய்கை மேம்படுத்தும் பணி, திருமால் விழுங்கி ஊரணி மேம்படுத்தும் பணிகள், வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவ பிரிவுகள், பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி,வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க தடுப்பணை,மீன்வளம் நவீன மீன் விற்பனை அங்காடி சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் மத்தளம்பாறை, குழந்தைகள் மையக் கட்டடங்கள் அரசு ஆதிதிராவிடர் நல நவீன சமுதாயக்கூடங்கள் என மொத்தம் 22 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.மேலும், இவ்விழாவில் தமிழக முதல்வர் மொத்தம் 34 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 1,03,508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கினார்.