day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு : மு.க.ஸ்டாலின்

10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு : மு.க.ஸ்டாலின்

சென்னை : பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை. தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக.

இருமொழி கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார். திமுக போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. திமுக போல் தோல்வி அடைந்த கட்சியும் இல்லை.

திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. சாதி, மதத்தின் பெயரில் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே உழைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும்” என தெரிவித்தார்.

செல்வராஜ் ஏற்கனவே நம்முடைய இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும், இன்றைக்கு அவருடைய சீரிய முயற்சியோடு நம்முடைய மாவட்டக் கழக முன்னோடிகளின் ஒத்துழைப்போடு ஆயிரக்கணக்கில் இன்று அதிமுக, தேமுதிக போன்ற பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் முதலில் நான் தலைமைக்கழகத்தின் சார்பில் வருக, வருக, வருக என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நாட்டில் திமுகபோல் வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சி ஒன்று கிடையாது. திமுக போல் தோற்றிருக்கக்கூடிய கட்சி ஒன்று கிடையாது. இரண்டிலும் நமக்குதான் பெருமை. வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி, இரண்டிலும் நமக்குதான் பெருமை. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். கருணாநிதி எப்படி தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறபோது திருக்குறள் போன்று இரண்டு வரிகளை சொல்வார், சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று.
பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம், இது சொன்னது. கரோனா காலத்தில் பாதிப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்காக வந்தவுடன் நாங்கள் 4000 ரூபாய் தருவோம் என்றோம், இது சொன்னது. அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவியர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், அதற்காக புதுமைப்பெண் என்று ஒரு திட்டம். இது சொல்லாதது.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பக்கத்தில் இருக்கக் கூடிய இதே கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10,000-க்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞன் திருமகன் ஈவெரா அகால மரணம் அடைந்துவிட்ட காரணத்தால், அங்கு ஒரு இடைத்தேர்தல் வரவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது, அதைச் சந்தித்தோம்.

அந்தத் தேர்தலில் அதே காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் ஈவெரா-வினுடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிற்கவைத்து நம் கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிற்கவைத்து கிட்டத்தட்ட 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோமா? இல்லையா? கணக்கு போட்டு பாருங்கள். ஏற்கனவே நடந்த தேர்தலில் 10,000-க்குக் கீழே. இப்போது இந்த இடைத்தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி. என்ன காரணம்? இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கை. ஆகவே, இதையெல்லாம் வரவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலே இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

இன்றைக்கு மதத்தைப் பயன்படுத்தி, சாதியைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன்மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு இன்றைக்கு அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்றத் தேர்தல்தான். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுவையையும் சேர்த்து 40-க்கு 40. நாடும் நமதே, நாளையும் நமதே. ஏதோ தமிழகத்தில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம், அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!