தமிழகம் முழுவதும் ஹெச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், தற்போது டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 1,000 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார். காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு இருப்பவா்கள் இந்த முகாமிற்கு வந்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.