சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965 விற்பனையாகி வந்தது. இந்தநிலையில், இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.50 உயர்ந்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து, 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி இன்று முதல் ரூ.1015க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 6 மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அதேபோல, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு ரூ.2,508 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. முன்னதாக கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.