தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை ஒரேநாளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இன்று காலை வெளியான பொதுத்தேர்வு முடிவுகளின் படி, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 93.76 சதவிகிதமும் அதில், மாணவியர் 96.32 சதவிகிதமும், மாணவர்கள் 90.96 சதவிகிதமும் தேர்ச்சி பெற்று வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே 5.36 சதவிகிதம் அதிகம் தேர்ச்சிப்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 90.07 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதில் மாணவியர் 94.38 சதவிகிதமும், மாணவர்கள் 85.83 சதவிகிதமும் பெற்று 12ஆம் வகுப்பைப்போலவே மாணவர்களை விட மாணவிகளே 8.55 சதவிகிதம் அதிகம் தேர்ச்சிப்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முவுகளை தமிழக அரசு தேர்வுத்துறையின், tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தியாகவும் அரசு தேர்வுத்துறையால் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.