தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஒரேநாளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுமென்றும், தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்வெழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று ஜூன் 22ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.