இன்று சட்டசபையில், தொழிற்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காகிதக் கப்பல் என்று குறிப்பிட்டது தொடர்பாக அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடந்த 10 மாதங்களில் 69,375 கோடி ரூபாய் மதிப்பில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிருக்கின்றன. அதன்மூலம் தொழிற்துறை வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு எங்கும் பாராட்டு கிடைத்துவருகிறது. மேலும் தொழில் வளர்ச்சியை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும், தொழிற்துறை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்றார்.