தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 3,936 தேர்வு மையங்களில் மொத்தம் 9.55.139 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில், 30,765 தனித் தேர்வர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். அதேபோல, புதுச்சேரியிலும் இன்று 10ஆம் வகுப்பு தேர்வை 16,802 மாணவர்கள் எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் மாணவ மாணவிகள் காலை 9.45 மணியில் இருந்து தேர்வு அறையில் இருந்து வருகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.