திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விவேக். இவருக்கு திரைப்படங்களில் தீக்கு முன்னாள் கதாநாயகன் நடந்து வந்து என்ட்ரீ கொடுப்பது போன்ற காட்சிகளை பார்த்துவிட்டு, தானும் அதேபோல நெருப்புக்கு மத்தியில் நடந்து வந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காக திருப்பத்தூர் ப.உ.ச நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்று குப்பையை எரித்து, எரியும் குப்பை முன்பு ரீல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, விவேக் வீடியோ எடுக்க உதவியாக இருந்த நகராட்சி ஊழியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், ரீல் வீடியோ எடுக்க குப்பையை கொளுத்திய விவேக் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.