ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஐ.பி.எல். தொடரின் 11வது நாளான இன்று 13வது லீக் ஆட்டம் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன. ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் மும்பையை 23 ரன் வித்தியாசத்திலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.