ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சபாஸ் அகமது 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 44 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.