சாதிக்க வயது தடையில்லை என்பார்கள். இது பெரியோருக்கு மட்டுமல்ல, இளையோருக்கும்
பொருந்தும். ஓடி விளையாடும் 12 வயதில் யூடியூப், இணையதளம், வலைப்பூ ஆகியவற்றை
நடத்திவருகிறார் ஹாசினி. ஊரடங்கின்போது ஒவ்வொ ருவரும் ஒவ்வொன்றைத்
தேர்ந்தெடுக்க, ஹாசினியோ, ‘த ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ அமைப்பையும் அதற்கான யூடியூபையும்
தொடங்கினார். இதன்மூலம் சிறு வயதிலேயே தொழில்முனைவோராகவும் பிரகாசிக்கிறார்.
ஒரு பத்திரிகையில் மாணவ நிருபராகவும் பணியாற்றுகிறார்.
இளம் சாதனையாளர்களை பேட்டி எடுத்து வெளியிடுகிறார் ஹாசினி.
“ஆரம்பத்தில் சில வீடியோக்களை வெளியிட்டோம். பிறகு ‘world of 7 Lines' என்று ஒரு புது
சீரிஸ் தொடங்கினோம். திருக்குறளில் 7 வார்தைகள் தான் இருக்கும். ஆனால், அது ஒரு
மனிதனுடைய வாழ்க்கை முறை யையே மாற்றக் கூடியதாக இருக் கிறதுதானே. அதனால்,
வெறும் ஏழு வரிகளை வைத்தே ஒரு மனிதனுடைய மனநிலையை எப்படி மாற்றலாம் என்பதை
வைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ‘world of 7 Lines’.
ஊரடங்குக் காலத்தில் எல்லாரையும் போல விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்துக்கொண்டு
இருந்தேன். ஆனால், இந்த அதிகப்படியான நேரத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று
எண்ணும்போதுதான், அப்பா ஒரு ஐடியா கொடுத்தார். தந்தையர் தினம் வருகிறது,
குழந்தைகளைப் பேட்டி எடுத்துப்போடுகிறாயா என்று கேட்டார். உடனே வீடியோ எடுத்து
அதை எடிட் செய்து, இணையதளத்தில் போஸ்ட் செய்தேன். அந்த வீடியோவைக் குறைந்தது 30
பேராவது பார்த்தால்போதும் என்கிற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், 500க்கும்
அதிகமானோர் பார்த்திருந்தனர். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இதைத் தொடரலாமா வேண்டாமா
என்று என் பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் அதற்கு சம்மதித்தனர்” என்கிறார் ஹாசினி.
ஹாசினியின் தந்தை பேச்சாளர், எழுத்தாளர், தொழில்முனைவோர். அதனால், ஹாசினிக்கும்
எழுதுவது, பேசுவது போன்றவை இயல்பாகவே அமைந்தன. ஏழு வயதில் அவருடைய
தந்தையுடன் ஒரு நிகழ்ச்சிக்குப் போனபோது, அங்கே சிறப்பு விருந்தினராக வந்தவரின் பேச்சு
ஹாசினியைக் கவரந்தது. தானும் பிற்காலத்தில் சிறந்த தொழில்முனைவோராக மாற வேண்டும்
என நினைத்தார். அதன்பின் பள்ளியிலும் வெளியிலும் நடக்கிற போட்டிகளில் பங்கேற்றார்.
இதற்கிடையே ஊரடங்கும் வர, குழந்தைகள் எல்லோரும் ஆன்லைனில் மூழ்கினர்.
குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டுவருவதற்கும் ஊக்கப்படுத்தவுமே இதை
ஆரம்பித்தார். ஹாசினி பள்ளியில் வழங்கப்படும் இளம் தலைமுறைக்கான சாதனையாளர்
விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார். குளோபல் யங் அச்சீவர் விருதையும்
பெற்றிருக்கிறார்.
கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடத்தப் படும்
பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக் கிறார்.
“வயது என்பது ஒரு எண்தானே தவிர அது சாதிக்கத் தடையாக இருப்பதில்லை. சாதிக்க வயது
முக்கியம் இல்லை என்பதை எலலோருக்கும் எடுத்துக்காட்ட வேண்டும் என்பதைத்தான் நான்
விரும்புகிறேன். குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பெரும்பாலான பெற்றோர்
பார்ப்பதில்லை. அவர்களுடைய ஐடியாவைத்தான் அவர்கள் மீது திணிக்கிறார்கள். அதை
முதலில் தவிர்க்க வேண்டும். இதை நான் பெரிய அளவில் செய்யவில்லை என்றாலும் ஏதோ
என்னால் முடிந்த அளவுக்குச் செய்கிறேன். சுமார் 25 ஆயிரம் மக்களுடன் நான்
இணைந்துள்ளேன். செமினார் முடிந்தபின் அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வியிலோ
அவர்கள் தெரிவிக்கும் கருத்திலோ அது தெரிந்துவிடும். நான் சாதிக்கவில்லை என்றாலும்
அதைநோக்கிப் பயணிக்கிறேன் என்பதுதான் மகிழ்ச்சியாக உள்ளது” என்று புன்னகைக்கிறார்
ஹானிசி.
தன்னுடைய சமூக வலைத்தளச் செயல்பாடுகள் தனது படிப்புக்குத் தடையாக இருந்ததில்லை
என்கிறார். அப்பா, அம்மா இரண்டு பேருமே தனக்குப் பக்கபலமாக இருப்பதாகச் சொல்கிறார்
ஹாசினி.
“இப்போதைக்கு யூடியூப்பில் எனக்கு ஆயிரத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர் இருக்கிறார்கள்.
53 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இதுவரைக்கும் 60 க்கும்
அதிகமானோரை பேட்டி எடுத்துள்ளேன். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கவர்தான்.
ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொருவர் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொருநாளும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். புதிய கற்றல், புதிய
தொடக்கம்” என்று கட்டை விரல் உயர்த்தி உற்சாகமாக முடிக்கிறார் இந்த எட்டாம் வகுப்பு
மாணவி!