சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஷவர்மா என்பது மேல்நாட்டு உணவு. எனவே இது நம்நாட்டிற்கு உகந்தவை அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். நம் நாட்டு உணவுகளை மக்கள் விரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஷவர்மா விற்பனை செய்யப்படும் கடைகளில் தரமானதாக உள்ளதா அங்கு இறைச்சிகள் பதப்படுத்தும் வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன், ஆய்வின் அடிப்படையில் சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.