பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப், அந்தநாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது என தெரிவித்தார். இந்தநிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு அமெரிக்கா சார்பில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் விரும்புகிறோம். வலுவான, வளமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானை நமது இரு நாடுகளின் நலன்களுக்கும் இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது என தெரிவித்துள்ளார்.