வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. இதனை, ராய வேலூர் சதுரங்க சங்க செயலாளர் மனோகரன் துவங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இருந்து மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளில் ஐந்து பிரிவுகளாக ஆண்கள், பெண்கள் என போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் 7 வயது பிரிவில் குகனும், 9 வயது பிரிவில் யுவன் சங்கரும், 17 வயது பிரிவில் சாம் யாதிதாவும்,19 வயது பிரிவில் அருண்குமாரும் முதல் பரிசை வென்றனர். பொதுப்பிரிவில் வேணுகோபால் முதலிடம் பெற்றார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், சான்றுகளையும், ரொக்கப்பரிசுகளையும் தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் மணிகண்டன் வழங்கினார். இதில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.