அமெரிக்கர்கள் பயன்பெறும் வகையில் காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காப்பீடுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இதற்கான விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு செல்ல இருக்கிறார். இவர், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் இணைந்து விழாவைக் கொண்டாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.