day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வெளிச்சம் தரும் 20 திட்டங்கள்

வெளிச்சம் தரும் 20 திட்டங்கள்

பெண்கள் நாட்டின் கண்கள். இந்தக் கண்களைப் பாதுகாக்க நம் நாடு இப்போது என்ன செய்கிறது, அதை எப்படிச்செய்கிறது என்பதைப் பட்டியலிட்டுக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த அரசாங்கத் திட்டங்கள் பலவகைப்படுகின்றன. பெண் குழந்தை பிறப்பதைத் தடுக்கப்படுவதைக் கண்காணிப்பதிலிருந்து, அவர்களுக்கான சத்துணவு, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, தங்குவதற்கு இடம் என்று பெண்கள் தின வாழ்வோடு சம்பந்தப்பட்ட சுமார் 20 திட்டங்கள் உள்ளன.
1.பாதுகாப்பும் கல்வியும்
இந்தத் திட்டம் (ஆஞுtடி ணீச்ஞீடச்ணி, ஆஞுtடி ஆச்ஞிடச்ணி குஞிடஞுட்ஞு) நூறு கோடி கையிருப்புப் பணத்துடன் 22.1.15 அன்று அறிவிக்கப்பட்டது. பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தித் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் பெண்களுக்குக் கொடுக்கப்படும் பலன்கள்:
தி பெண் சிசுவைக் கருவிலேயே அழிப்பதைத் தடுப்பது.
தி பெண் குழந்தைகள் பிழைப்பதற்கும் அவர்கள் பாதுகாப்பிற்கும் உதவி அளிப்பது.
தி பெண் குழந்தைகளின் கல்வி.
2.வன்முறையிலிருந்து விடுதலை
இந்தத் திட்டம் (Oணஞு குtணிணீ இஞுணtணூஞு குஞிடஞுட்ஞு) பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாத்து, வாழ்வதற்கு வழி செய்வதற்கென நிர்பயா நிதியின் உதவியுடன் தொடங்கப்பட்டது.இதன் முக்கிய அம்சம்.
தி பொதுவெளி அல்லது தனிமையில் கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு ஒரே கூரையின்கீழ் பாதுகாப்பும் ஒருங்கிணைந்த பாதுகாப்பும் அளிப்பது.
தி வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அவசர உதவி மற்றும் அத்தியாவசிய உதவியை அளிப்பது. இந்த உதவி மருத்துவம், சட்டம், மன நிலை பாதிப்பு, ஆலோசனை வழங்குதல் என்று பல்வேறு வகைப்படுகிறது.
3. 24 மணிநேரமும் சேவை
வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் அழைக்கவும், உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உதவும் திட்டம்தான் இந்த இலவச அழைப்பு எண் திட்டம் (ஙிணிட்ஞுண டஞுடூணீடூடிணஞு ண்ஞிடஞுட்ஞு).
1.4.2015 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சேவைக்கான பிரத்யேக தொலைபேசி ஹெல்ப்லைன்கள் உள்ளன. 181 வன்முறை பாதுகாப்பிற்கு, 1091 காவல்துறை தொடர்பிற்கு,102 மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உதவிக்கு,108 வேறு எந்தவித எமெர்ஜென்சி தேவைக்கும். இவை அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் மாவட்ட சட்ட சேவை அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்புகொள்ள இயலும்.
4. தங்கும் விடுதி
இந்தத் திட்டத்தின் (ஙிணிணூடுடிணஞ் ஙிணிட்ஞுண’ண் ஏணிண்tஞுடூ – ஙிஙிஏ) நோக்கம், பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் அது நகர்ப்புறமாக அல்லது முற்றும் நகர்ப்புறமாக வளர்ச்சி அடையாததாக அல்லது கிராமமாக, இப்படி எங்கிருந்தாலும் அவர்கள் பாதுகாப்பிற்கெனத் தனி தங்கும் விடுதி ஏற்படுத்திக்கொடுப்பது. குழந்தைகள் பாதுகாப்பகமும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
5. வேலைவாய்ப்புடன் கடனுதவி
பெண்களின் திறன் வளர்ச்சிக்கென தொடங்கப்பட்ட திட்டம் (குதணீணீணிணூt tணி கூணூச்டிணடிணஞ் ச்ணஞீ உட்ணீடூணிதூட்ஞுணt கணூணிஞ்ணூச்ட்ட்ஞு ( குகூஉக) ஞூணிணூ தீணிட்ஞுண. தினக்கூலிப் பெண்கள், தினக்கூலிகூடக் கொடுக்கப்படாமல் வேலை செய்பவர், பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்று அனைத்துப் பெண்களும் இதன் கீழ் வருவார்கள். இதன் செயல்பாட்டு முறையில் இவ்வாறான பெண்கள் சிறு குழுக்களாக அமைக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயிற்சி, கடன் பெறுவதற்கான முறைகள் அமைத்துக் கொடுக்கப்படும். தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு அதை மேன்மைப்படுத்தி க்கொள்ளவும், வருமானம் பெற் றுத்தரக்கூடிய வேலையை அதனு டன் இணைப்பதும் இதன் நோக்கமாகும்.
6. தற்காலிகப் புகலிடம்
துன்புறுத்தப்பட்ட, குற்றம் இழைக்கப்பட்ட, சமூகத்தால் புறக்கணிக் கப்பட்ட, மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகளிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட பெண்களுக்கான தற்காலிகப் புகலிடம் வழங்கும் இந்தத் திட்டம் (குதீச்ஞீடச்ணூ எணூஞுட குஞிடஞுட்ஞு) 2001-லிருந்து செயல்படுகிறது. இங்கே தங்குபவர்களின் உடை, உணவு என்று வாழ்வின் தேவைகள் இந்தத் தற்காலிக தங்குமிடத்தில் நிறைவேற்றப்படுகிறது. அவர்கள் இழந்த மன பலத்தைத் திரும்பிப் பெறவும், சட்ட ஆலோசனைகள் பெறவும், அவர்கள் கண்ணியமாக மற்றும் சுயமரியாதையுடன் வாழவும் வழி செய்யப்படுகிறது.
7. குழந்தைகளுக்காக
குழந்தையோடு போராடும் பெண்கள், குழந்தைகளை ஒரு பாதுகாப்பான நிலையத்தில் விட்டு விட்டு, வேலைக்குக் கவலை இன்றி செல்வதற்கென 2012 ல் தொடங்கப்பட்டு 2016இல் மாற்றி அமைக்கப்பட்டது இந்தத் திட்டம் (கீச்டீடிதி எச்ணஞீடடி Nச்tடிணிணச்டூ இணூஞுஞிடஞு குஞிடஞுட்ஞு). இந்தத் திட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படுகிறது.
8. இளம் தாய்மார்களுக்கு
2010-ல் ஐணஞீடிணூச் எச்ணஞீடடி Mச்tணூடிtதிச் குச்டதூணிஞ் ஙுணிடீச்ணச் எனும் திட்டமாக அறிவிக்கப்பட்டுப் பின் 2014-ல் வேறு பெயரிடப்பட்டுப் பின் 2017இல் தற்போதுள்ள பெயரில் மாற்றி அமைக்கப்பட்டது இந்தத் திட்டம் (கணூச்ஞீடச்ணச் Mச்ணtணூடி Mச்ணtணூத ஙச்ணஞீச்ணச் ஙுணிடீச்ணச்). இந்தத் திட்டத்தின் நோக்கம் முதல் முறை குழந்தை பெற்ற பெண்களுக்கு முதல் ஆறு மாதத்திற்கு அவர்கள் பெற்றுவந்த சம்பளத்தில் ஒரு தொகையைப் பணமாகக் கொடுப்பது. இதன்மூலம் இப்பெண்கள் குழந்தையைப் குறிப்பிட்ட காலம்வரை வீட்டிலிருந்தபடியே பார்த்துக்கொள்ளவும், தாய்ப்பால் கொடுக்கவும் அதே சமயம் பிரசவத்தால் ஏற்பட்ட பலவீனத்திலிருந்து அவர்களை மீட்டு எடுக்கவும் வழிவகுக்கிறது.
9. சுயதொழில் செய்வோருக்கு
பெண்கள் தங்கள் கைவினைப்பொருட்களைக் கண்காட்சிப்படுத்தவும் அவற்றை நேரடியாக விற்பனை செய்யவும் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம் (Mச்டடிடூச் ஞு – ஏச்ச்t). ராஷ்ட்ரீய மகிளா கோஷ் எனும் வலைத்தளம் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ‘மேக் இன் இண்டியா‘ வலுப்பெற்று பெண்கள் தொழில்முனைவோர்களாக உதவி செய்யப்படுகிறது.
10. உதவும் பாலம்
இந்தத் திட்டத்தின் தன்னார்வலர்கள் (Mச்டடிடூச் ணீணிடூடிஞிஞு திணிடூதணtஞுஞுணூண்) காவல்துறைக்கும் பொதுமக்கள் அதாவது பெண்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்படுபவர்கள். பெண்களுக்கான அநீதி, துன்புறுத்தல், குழந்தைத் திருமணங்கள், வரதட்சணை பிரச்சினைகள், வீட்டில் வன்முறை செயல்கள், பொது இடங்களில் பெண்கள் துன்புறுத்தல் ஆகியவற்றை இவர்கள் காவல்துறையிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
11. கண்காணிப்பு
2011 இல் பெண் களின் ஒருமித்த முன் னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம் (Nச்tடிணிணச்டூ Mடிண்ண்டிணிண ஞூணிணூ உட்ணீணிதீஞுணூட்ஞுணt ணிஞூ ஙிணிட்ஞுண – NMஉஙி). பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தும் திட்டங்களும் அவை வகுக்கப்பட்ட காரணத் திலிருந்து நடைமுறையில் மாறுபட்டு இருப்பதையும் புரிய வைப்பதற்கென வகுக்கப்பட்டதே இந்தத் திட்டம்.
12. கிராமப்புறப் பெண்களின் விடியல்
மாணவ சமுதாயத்தின் பங்கேற்புடன், கிராமப் புறப் பெண்களின் வளர்ச்சிக்காக 2017இல் தொடங்கப்பட்ட திட்டம் இது (கணூச்ஞீச்டச்ண Mச்ணtணூடி Mச்ணடிடூச் குடச்டுtடி ஓஞுணஞீணூச் ண்ஞிடஞுட்ஞு). பெண் குழந்தைகளின் படிப்பு, அவர்களுக்கான சேமிப்பு, அவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
13. திறன் மேம்பாட்டுக்கு
பெண்களின் சுய தொழில் வாய்ப்புகளுக்கு வசதி செய்து தர 1993இல் இந்தத் திட்டம் (கீச்ண்tணூடிதூச் Mச்டடிடூச் ஓணிண்ட – கீMஓ) தொடங்கப்பட்டது. தொழில் வாய்ப்புகளை அமைத்துக்கொடுத்து, பண உதவியைச் சுலபமாகப் பெற்றுத்தர மற்றும் திறன் மேன்பாட்டை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டது.

14. ஊட்டச்சத்துக்கு
அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு அதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இணையம்மூலம் படிப்பை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டது இந்தத் திட்டம் (Nச்ணஞீ – எடச்ணூ ஙுணிடீச்ணச்). 0-6 வயதுக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது.
15. 2016இல் வறுமைக் கோட்டிற்குக்கீழான பெண்களுக்கு எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாகத் தருவதன் மூலம் அவர்களைச் சுகாதாரமற்ற எரிபொருள்களின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் எண்ணத்தில் அமைக்கப்பட்டது இந்தத் திட்டம் (கணூச்ஞீடச்ணச் Mச்ணtணூடி க்டீடீதீச்டூச் ஙுணிடீச்ணச்). இதனால் புகையால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
16. மகப்பேறு உதவி
கர்ப்பிணிகளுக்கு முதல் குழந்தை பிறப்பின்போது ஊக்கத்தொகையாக ரூ.6000 கொடுக்கப்படும். மிக அதிகமாக மக்கள் உபயோகித்த திட்டம் இதுதான் (Mச்tஞுணூணடிtதூ ஆஞுணஞுஞூடிt கணூணிஞ்ணூச்ட்). இது வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருக்கும் பெண்களுக்கானது.
17. சேமிப்புக் கணக்கு
இது பெண் குழந்தைகளின் நலனுக்காகப் பெற்றோர்களை சேமிப்புக் கணக்குத் தொடங்க வைப்பதற்கான திட்டம். இதில் சேமிக்கப்படும் தொகை பெண்களின் படிப்பு, கல்யாணம் அல்லது அவர்களின் மற்ற கனவுகளை நிறைவேற்றப் பயன்படும். இதில் 8.4% வட்டி கிடைப்பதுடன், பிரிவு 80 சியின் கீழ் வருமான வரி விலக்கும் உண்டு.
18. இணையவழி சேவை
இது தனியார் தொண்டு நிறுவனங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் எளிதில் தொடர்பு கொண்டு பெண்கள் பிரச்சினையை முன்னிறுத்த ஏற்படுத்தப்பட்ட இணைய முகப்பு (ஞு குச்ட்திச்ஞீ கணிணூtச்டூ).
19. தகவல் இணையம்
இந்த இணைப்பு (Nச்ணூடி ஙிஞுஞ கணிணூtச்டூ)முகப்பு 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலே கூறப்பட்டுள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களோ அல்லது மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் 350 விதமான திட்டங்கள் பற்றிய தகவல்களோ இதன் மூலம் அறிய முடியும்.
20. புகார்ப் பெட்டி
வேலைபார்க்கும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகப்படும் பெண்கள் உடனடி நிவாரணம் பெற இந்தத் தளத்தை (குடஞு- ஆணிது கணிணூtச்டூ) உபயோகப்படுத்தலாம். 2018இல் தொடங்கப்பட்ட இந்த இணையதளம், இங்கே கொடுக்கப்படும் புகார்களை மத்திய அல்லது மாநில அளவில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடியவரிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கிறது.
மேலே கூறப்பட்டவை தவிர பெண்களுக்கான மற்ற சில சலுகைகள் இவை:
1. 58 வயது முடிந்துவிட்ட பெண்களுக்கு ரயில் பயணச்சீட்டில் 50% தள்ளுபடி.
2. வங்கிகளில் பெண்கள் பெயரில் வாங்கப்படும் வீட்டுக் கடன்களுக்கு வட்டித்தொகை விகிதத்தில் 50% குறைக்கப்படும்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!