20 ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடரில் இன்று புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணியைப் பொருத்தவரை கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வியடைந்து திண்டாடிவருகிறது. அதேபோல, ஐதராபாத் அணியும் முதல் இரு லீக்கில் ராஜஸ்தானிடமும், அடுத்த ஆட்டத்தில் லக்னோ அணியிடமும் சரண் அடைந்தது. இதனால், இந்த இரு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் போராடும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தவிர, இந்த இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12ஆட்டத்தில் சென்னையும், 4ஆட்டத்தில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.