15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்க்கொள்ள இருக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தபோட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற உள்ளது. இந்ததொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதுவரை இந்ததொடரில் 9 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 5ஆட்டத்தில் வெற்றியும், 5ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி இந்த ஆட்டத்திலும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு சென்னை அணியின் ரசிகர்களிடையே காணப்படுகிறது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேருக்கு நேர் 29 போட்டிகளில் சந்தித்து உள்ளது. இதில், 19 போட்டிகளில் சென்னை அணி வெற்றிப்பெற்றுள்ளது. இதன்படி, பார்க்கும் போது இந்தஆட்டத்தில் சென்னை அணி வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.