நீலகிரி மாவட்டம் உதகை அருகே தனியார் தேயிலை எஸ்டேட்டில் வசிக்கும் கீதாவின் வீட்டுக்குள் சென்றால் அங்காட்சியகம் போல காட்சி தரும் அளவிற்கு கைகளால் உருவாக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிறு வயது முதலே ஓவியங்கள் மற்றும் கலை பொருட்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் கீதா. இல்லதரசியன இவர் தேங்காய் ஓடு, வேர்க்கடலை தோல், பிஸ்தா தோல், வனப்பகுதியில் மரங்களிலிருந்து விழும் இலை, பூ, மரப்பட்டை போன்ற பொருட்களைக் கொண்டு அலங்காரப்பொருட்களை உருவாக்கி உள்ளார். மேலும் குப்பையில் வீசப்படும் பாட்டில்,வாகன டயர்கள், ஆயில் கேன்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டும் தத்ரூபமாக கலை பொருட்களை உருவாக்கி வீட்டையே கலை பொருட்களால் அருங்காட்சியகம் போல அலங்கரித்துள்ளார். குறிப்பாக வேர்க்கடையின் தோல்களை கொண்டு உறுவாக்கப்பட்ட மயில், பிஸ்தா தோல்களை கொண்டு உறுவாக்கப்பட்ட மலர்கள் மற்றும் கையினால் உறுவாக்கப்பட்ட ஓவியங்கள், அலங்கார பாட்டில்களில், ஆயில் கேனில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிற்பம், வாகன டயர்களால் உறுவாக்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கலை பொருட்களை கீதா உருவாக்கியுள்ளார். இந்தநிலையில், வருங்காலத்தில் ஓவிய கண்காட்சிகளில் இவர் உறுவாக்கிய கலை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கீதா தெரிவித்துள்ளார்.