சமூக வலைத்தளங்கள் மூலம் நாள்தோறும் தவறான செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விரைவில் நடைபெற இருக்கும் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. தயவுசெய்து இதுபோன்ற பதிவுகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டுள்ளது.