நம் நாட்டில் ரயில்வே துறையும், அஞ்சல் துறையும் சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றன. அந்த வகையில் இவ்விரு துறைகளும் இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவையை உருவாக்கியிருக்கின்றன. அதாவது, ஒரு பார்சலை வாங்குவதும் கொடுப்பதும் அஞ்சல் துறையின் சேவை என்றால், பார்சலை ரயில் நிலையங்களுக்கிடையே கொண்டு செல்வது ரயில்வே துறையாகும். அதாவது அனுப்புகின்றவரின் இடத்தில் இருந்து, கொண்டுசென்று பெறுகின்றவரின் இடத்தில் அளிப்பதாகும். முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் முதல் சேவை, 2022 மார்ச் 31ல் சூரத் – வாரணாசி இடையே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.