சென்னை நந்தம்பாக்கத்தில் தக்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திரைப்படங்கள் தொடங்கும்போதும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் காண்பிக்கப்படுவது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று. இதேவேளையில், குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் தாக்கம் இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.