உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போரால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்துவருகின்றன. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4919க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.39,352க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,544க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.71.50க்கு விற்பனையாகிறது.