தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள், நாளை மறுநாள் புனித வெள்ளி என்பதால் 2 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறை நாள் என்பதால், சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் பணியாற்றியவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட தயாரக இருக்கின்றனர். இந்தநிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், அரியலூர், மதுரை, நாகர்கோவில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஓசூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு இயக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் சென்னைக்கு திரும்பிட ஏதுவாக, வரும் 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் உத்தவிடப்பட்டு உள்ளது.